ஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வி பாதிப்பு | Oneindia Tamil

2019-01-23 1,061

புதிய ஓய்வூதிய் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் , அனைத்து நிலை ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்பட மாவட்டத்தில் பெரும்பாலன பள்ளிகள் , வட்டாட்சியர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெற்றொர் கூறுகையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்வுக்கான ஆயுத்த பணிகள் பாதிக்கபடும். மாணவர் மாணவிகளின் படிப்பு பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் சென்றால் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கி நிலையில் தான் இருக்கும் .அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர் .இது பற்றி அறியாத ஏதுமே தெரியாத பள்ளி குழந்தைகள் உற்சாகமாக விளையாடுகிறார்

DES : Teachers struggle .. schools are closed because of school educati

Videos similaires